மாஸ்டர் விஜயை போல கோலிவுட்டின் அடுத்த வாத்தியாகும் தனுஷ்! ரிலீசான CLASSY டைட்டில் லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

Advertising
>
Advertising

தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தானு தயாரிப்பில் நானே வருவேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இப்படங்களை தொடர்ந்து தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் இன்று காலை 9:36 மணிக்கு வெளியாகி உள்ளது. வாத்தி என்று தலைப்பு இந்த படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடல் மட்டுமல்லாமல் படம் முழுவதும் வாத்தி என விஜய்யை சுற்றியுள்ள கதாபாத்திரங்கள் அழைக்கும். இந்நிலையில் மாஸ்டர் விஜய்யை தொடர்ந்து கோலிவுட்டின் அடுத்த வாத்தியாக தனுஷ் உருவெடுத்துள்ளார்.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாவதை போஸ்டர் மூலம் அவதானிக்க முடிகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Next Telugu Movie Tittled as Vaathi Sir

People looking for online information on Dhanush, Master, Nagavamsi, Samyuktha Menon, Sir, Telugu Movie, Vaathi, Venki Atluri, Vijay will find this news story useful.