"ரெண்டு ராஜா".. தனுஷ் நடிக்கும் நானே வருவேன்.. வெளியானது இரண்டாம் சிங்கிள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. "ஒரு ஊருல ரெண்டு ராஜா" எனத் தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

Advertising
>
Advertising

'நானே வருவேன்'  படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார். 

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த பாடலை நடிகர் தனுஷ் எழுதி உள்ளார். "ஒரேயொரு ஊருக்குள்ள ஊருக்குள்ள ரெண்டு ராஜா இருந்தாராம்" எனத் துவங்கும் இந்தப்பாடலை யுவன் சங்கர் ராஜா & தனுஷ் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் 3 நிமிடங்கள் 35 வினாடிகள் நீளத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். செப்டம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் "வீரா சூரா" சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், படத்தின் இரண்டாம் சிங்கிள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Nane varuven second single song released

People looking for online information on Dhanush, Naane Varuven, Second Single, Selvaraghavan will find this news story useful.