'நானே வருவேன்' படத்தின் UK ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய டாப் வினியோகஸ்தர்! மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் UK ரிலீஸ் உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

'நானே வருவேன்'  படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார். 

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.  இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் (ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான) பிரிட்டன் ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளரான அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Naane Varuven Movie UK England Theatrical Rights

People looking for online information on Dhanush, England, Naane Varuven, UK will find this news story useful.