OFFICIAL: தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. பட ரிலீஸ் எப்போ? போஸ்டருடன் வெளியான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சோஷியில் மீடியாவில் இருந்து வெளியேறிய ராஷி கண்ணா.. அவரே வெளியிட்ட பரபர அறிவிப்பு

தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும்  'நானே வருவேன்'  படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் 'நானே வருவேன்' படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்றும், டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும், ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | VJ ரக்‌ஷன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. ஃபோட்டோவுடன் KPY தீனா செம அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Naane Varuven Movie Official Release Update

People looking for online information on Dhanush, Dhanush Naane Varuven Movie, Naane Varuven, Naane Varuven Movie Release Updates will find this news story useful.