தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் செல்வராகவன் கொடுத்துள்ளார்.
Also Read | "பாகுபலி" இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படம்..!! இந்த ஜானரா?! செம்ம..
தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.
இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்றும், டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது .
இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார்.
'நானே வருவேன்' படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இச்சூழலில் இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "நானே வருவேன் படத்தின் பின்னணி இசை பணிகளில்..மாஸ்ட்ரோ யுவனுடன் பணிபுரிவது மகிழ்ச்சியானது" என கூறியுள்ளார். இந்த புகைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் செல்வராகவன் உள்ளார்.
Also Read | இப்படியும் உலக சாதனை பண்ணலாமா? பிரபல சூப்பர்ஹிட் தமிழ் படத்தை 50 முறை பார்த்த ரசிகர்!