போடு வெடிய: தனுஷ் - செல்வராகவன் படத்தில் இணைந்த பிரபல அஜித் பட ஒளிப்பதிவாளர்! இவர் தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தனுஷ் செல்வராகவன் இணையும் 'நானே வருவேன்' படத்தில் ஒளிப்பதிவாளராக பிரபல ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

Dhanush Naane Varuven Movie has a Ajith DOP OM Prakash
Advertising
>
Advertising

தனுஷ் கொடுத்த டபுள் ட்ரீட்! "நானே வருவேன்" படத்தின் புதிய போஸ்டர்.. செம கேப்சனுடன் வெளியீடு!

தனுஷ், தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் வாத்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது.  இந்த படத்திற்கு தமிழில் வாத்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தானு தயாரிப்பில் நானே வருவேன் என்ற படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. மாறன் படம் ஒடிடி வெளியீடிற்கு தயாராகி வருகிறது. திருச்சிற்றம்பலம் படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இதில் நானே வருவேன் படத்தில் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வந்தது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.  யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 16.10.2021 அன்று பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மகாமுனி படத்தில் நடித்த நடிகை இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரவிந்த் கிருஷ்ணாவுக்கு பதிலாக சில்லுக்கருப்பட்டி, சாணிகாயிதம் பட ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் யாமினியும் சிலகாரணங்களால் விலகி உள்ளார். இவர்களுக்கு பதிலாக ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

ஓம்பிரகாஷ் ஏற்கனவே அஜித்குமார் நடித்த ஆரம்பம், வாகை சூடவா, அனேகன், திருச்சிற்றம்பலம், நீ தானே என் பொன்வசந்தம், களவானி, அறம், மாரி-2, பட்டாஸ், மாரி படங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். அனேகன், மாரி, மாரி-2, பட்டாஸ், திருச்சிற்றம்பலம் படங்களை தொடர்ந்து  ஆறாவது முறையாக தனுஷுடன் ஓம்பிரகாஷ் இணைகிறார்.

 

பரபர முத்தக்காட்சிகளுடன் மன்மதன் வெளியிட்ட மன்மத லீலை படத்தின் GLIMPSE!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Naane Varuven Movie has a Ajith DOP OM Prakash

People looking for online information on Ajith, செல்வராகவன், தனுஷ், நானே வருவேன், Dhanush, Naane Varuven Movie, Om Prakash will find this news story useful.