தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. ரிலீஸை ஒட்டி சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் சென்சார் போர்டு தகவல்  வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வெங்கட் பிரபு - நாக சைதன்யா இணையும் புதிய படம்.. இணைந்த இந்தியாவின் பிரபல டாப் DOP! மாஸ்

'நானே வருவேன்'  படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார். 

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைப்படங்களில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Also Read | சல்மான் கானுடன் தாறுமாறான டான்ஸ் ஆடிய சிரஞ்சீவி! சாதனை படைக்கும் காட்பாதர் படத்தின் LYRICAL VIDEO!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Naane Varuven Movie Censored UA CBFC

People looking for online information on Dhanush, Naane Varuven, Naane Varuven Movie updates will find this news story useful.