தனுஷ் - மாளவிகா மோகனன் இணையும் #D43.. படத்தை பற்றிய மாஸ் தகவல்.!! என்ன தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்து முக்கியமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. மேலும் இவர் தற்போது ஹிந்தியில் அத்ரங்கி ரே படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருடன் அக்‌ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் D43 படம் குறித்து பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்தின் இடையில், இப்படத்தின் பூஜை டெல்லியில் நடைபெற்றவுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் பட ஷூட்டிங் தகவல் | dhanush malavika mohanan starring d43 movie shooting details

People looking for online information on D43, Dhanush, GV Prakash Kumar, Karthick Naren, Malavika Mohanan will find this news story useful.