தனுஷ் நடிக்கும் மாறன்! பிரபல OTT-யில் எத்தனை மணிக்கு ரிலீஸ்? OFFICIAL அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தனுஷ் நடிக்கும் மாறன் படத்தின் ஒடிடி ரிலீஸ் நேரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாஃபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், டிரெய்லர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இப்படம்  பிரத்யேகமாக வெளியாகிறது என படக்குழு பிரத்யேக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Maaran Movie OTT Release Time Announced

People looking for online information on தனுஷ், Dhanush, Disney Plus Hotstar, Maaran, OTT will find this news story useful.