தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர்.
திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மாறன் படத்தின் படப்பிடிப்பு, தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க போனதால் சில் நாட்கள் நடைபெறாமல் இருந்தது. தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதால், மாறன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மாறன் படத்தின் அப்டேட் கேட்ட போது, அதற்கு இயக்குனர் கார்த்திக் நரேன் Final Lap என்று பதில் அளித்துள்ளார். எனவே விரைவில் படத்தின் படபிடிப்பு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.