சென்னை: தனுஷ் நடிக்கும் புதிய படம் நேரடியாக OTT-யில் வெளியாக உள்ளது.
![Dhanush Maaran Direct OTT Release Official Announcement Dhanush Maaran Direct OTT Release Official Announcement](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/dhanush-maaran-direct-ott-release-official-announcement-new-home-mob-index.jpg)
தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாஃபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள்.
திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இறுதிக்கட்ட இசை அமைப்பு பணிகள் நடந்து வருவதாகவும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் அறிவித்து இருந்தார். தெருக்குரல் அறிவுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருந்தது. படத்தில் 4 இசைக்கோர்வைகள் இருப்பதாகவும் அதில் ஒன்று படத்தின் தீம் மியூசிக் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த படம் தியேட்டர் ரிலீசை தவிர்த்து நேரடியாக ஒடிடியில் வெளியாக உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக உள்ளது. இதனை பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் ஏற்கனவே கலாட்டா கல்யாணம் படம் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.