தனுஷ் - கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம்.. ஸ்பெஷல் ட்ரீட்டாக வெளியான வெறித்தனமான பாடல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இருந்து ரகிட ரகிட எனும் பாடல் வெளியாகியுள்ளது,. 

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜொஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து ஸ்பெஷல் ட்ரீட்டாக ஜகமே தந்திரம் படக்குழுவினர் ரகிட ரகிட எனும் பாடலில் லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். கவிஞர் விவேக் எழுதியுள்ள இப்பாடலை, தனுஷ், தீ, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இணையத்தில் வெளியான இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷின் ஜகமே தந்திரம் பாடல் வெளியானது | Dhanush Karthick Subbaraj's Jagame Thandhiram Rakita Rakita Song is here

People looking for online information on Dhanush, Dhanush birthday, Jagame Thanthiram, Karthik Subbaraj, Rakita Rakita will find this news story useful.