VIDEO: தனுஷின் கர்ணன் FDFS.. தாரை தப்பட்டையுடன் தியேட்டரில் தெறிக்க விட்ட ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையி இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண திரையரங்குக்கு வருகை தந்த இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, தனுஷ் ரசிகர் மன்றத்தலைவர் மற்றும் இயக்குநர் சுப்ரமணியம் சிவா, இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தவிர, தாரை தப்பட்டை என அதகளம் செய்து ரசிகர்கள் கர்ணன் பட ரிலீஸை திரையரங்குகளுக்கு முன்பாக நின்று கொண்டாடினர். கர்ணன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியானதில் இருந்தே கர்ணன் படத்துக்கான எதிர்பார்ப்பு தனுஷ் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிகரித்தது.  கதிர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ் தமது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தினை இயக்கியிருந்தார்.

அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தனுஷ், ரெஜிஷா விஜயன், லால், நட்டி நட்ராஜ், யோகிபாபு, கௌரி கிஷன்,  லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி, அழகம் பெருமாள், பூ ராம், ஷண்முகராஜன் மற்றும் பலர் நடிப்பில் கலைப்புலி S தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கர்ணன். முன்னதாக தனுஷ் நடிப்பில் தாணு தயாரித்த அசுரன் படத்துக்கும் தனுஷ்க்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Karnan (Tamil) Review - கர்ணன் திரை விமர்சனம்

VIDEO: தனுஷின் கர்ணன் FDFS.. தாரை தப்பட்டையுடன் தியேட்டரில் தெறிக்க விட்ட ரசிகர்கள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Karnan Movie release FDFS fans celebration video

People looking for online information on Dhanush, Kalaipuli S Thanu, Karnan, Karnan Tamil, Mari Selvaraj, Santhosh Narayanan will find this news story useful.