BREAKING - தனுஷ் படத்திற்கு பிறகு.., விஜய் சேதுபதிதான் நெக்ஸ்ட்.! என்ன விவரம் தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷின் கர்ணன் பட நடிகை அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 

தனுஷ் நடிப்பில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தில் மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர்கள் லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். 

இந்நிலையில் நடிகை ரஜிஷா விஜயன் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. கர்ணன் படத்தை முடித்துவிட்டு, இவர் அடுத்து விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளாராம். விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில், ரஜிஷா விஜயனை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாம் படக்குழு. இதையடுத்து தமிழில் அறிமுகமான முதல் இரண்டு படங்களிலேயே தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்ததால், மகிழ்ச்சியில் இருக்கிறாராம் நடிகை. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் பட நடிகை விஜய் சேதுபதி படத்தில் நடிக்கிறார் | Dhanush Karnan Actress Rajisha Vijayan to act in Vijaysethupathi's Film

People looking for online information on Dhanush, Karnan, Muthaiya Muralidharan, Rajisha Vijayan, Vijay Sethupathi will find this news story useful.