ஆஹா! போடு வெடிய..! மரண மாஸ் இயக்குனருடன் அடுத்த படத்தில் இணையும் நடிகர் தனுஷ்! அவரே சொன்ன தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

Advertising
>
Advertising

வாத்தி

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் நேற்று காலை 9:36 மணிக்கு வெளியாகி உள்ளது. வாத்தி என்று தலைப்பு இந்த படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

ராக்கி

இந்நிலையில் தான் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக டிவிட்டரில் தனுஷ் அறிவித்துள்ளார். அதில் "ஆம். யூகங்கள் உண்மைதான். நான் தான் அந்த அதிர்ஷ்டசாலி நடிகர் அருண் மாதேஸ்வரன் எனது அடுத்த இயக்குனர். மேலும் விவரங்கள் விரைவில். ஓம் நமசிவாய" என டிவீட் செய்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படம் தியேட்டர்களில் நேற்று (23.12.2021) ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த ராக்கி படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 2011-ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கல்ட் அந்தஸ்து பெற்றுள்ள நியோ நொய்ர் வகைமையில் உருவான 'ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குனாரக இருந்தவர். இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கிய  ‘இறுதிச்சுற்று’ படத்தில் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர். அருண் மாதேஸ்வரன் தற்போது, செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

மாறன்

தனுஷ் தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

திருச்சிற்றம்பலம்

தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தானு தயாரிப்பில் நானே வருவேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Joining hands with Rocky Arun Matheshwaran

People looking for online information on Arun Matheshwaran, Dhanush, Maaran, Rocky, Thiruchitrambalam will find this news story useful.