இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம்.
தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படம் கடந்த வருடமே வெளியாக வேண்டிய திரைப்படம். இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் மிகவும் காத்திருந்து வந்தனர். இந்த நிலையில்தான் இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வெளியிட முடியாத சூழலால் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் இந்த திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நெட்ப்ளிக்ஸில் வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது. சொல்லப்போனால் ஒரு தமிழ் திரைப்படம் 17-க்கும் அதிகமான மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவது இதுவே முதல் முறை. இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கிறது.
இந்த படத்தின் வெளியீடு குறித்து ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் ரசிகர்கள் 17-க்கும் அதிகமான மொழிகளில் இந்த திரைப்படம் உண்மையில் வெளியாகிறதா? தயவுசெய்து இந்த தகவல் உண்மையா இல்லையா என்று சொல்லுங்கள் அது கோலிவுட்டில் மிகப்பெரிய அறிவிப்பாக அமையும் என்று கூற, இதற்கு பதிலளித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ், “படம் ஏற்கனவே டப்பிங் ஆகிவிட்டது... போடு தகிட தகிட!” என்று பதில் அளித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் கவனிக்கத்தக்க முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்து இருக்கிறார். நிச்சயமாக இந்த திரைப்படம் ஓடிடியில் தனுஷ் ரசிகர்களுக்கு ட்ரீட் தான் என பலரும் கூறி வருகின்றனர். ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான கர்ணன் திரைப்படம் திரையரங்கில் வெளியான பிறகு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த மே மாதம் 14ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: சிம்பு, ஹன்சிகாவின் மஹா படத்துக்கு கோர்ட் தடையா? தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு விளக்கம்!