எஸ்.ஜே.சூர்யா புதுப்படம் குறித்து நியூ அப்டேட் கொடுக்கும் 'தளபதி'S திரைத்துறை தம்பி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடித்த வாலி படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் அடுத்ததாக விஜய்யை இயக்கிய ’குஷி’ திரைப்படம் பெரும் வெற்றிபெற இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் ரீமேக் ஆனது.

பின்னர் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய அவர் ’நியூ’, ’அன்பே ஆருயிரே’ ஆகிய படங்களில் நடித்தார். அவரது தனித்துவமான நடிப்பு பாராட்டை பெற்றது. ’இசை’ படத்தை இயக்கிய அவர் தானே அப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து தன்னை ஒரு இசையமைப்பாளராகவும் நிரூபித்தார். இந்த ஆண்டு வெளியான ’மான்ஸ்டர்’ படத்தில் நடித்த அவர் தான் இனி நடிக்க உள்ள படம் குறித்து புதிய அப்டேட் ஒன்றை தந்துள்ளார்.

நேற்று (29.12.2019) தனது அடுத்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப்போவது யாராக இருக்கும் இன்று ரசிகர்களை கணிக்கசொல்லி டிவீட் போட்ட அவர், இன்று வந்த பதில்களை பற்றி ட்வீட் செய்திருந்தார்.

இந்த போஸ்டரை தனுஷ் நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளார் என்று அப்பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Dhanush is going to reveal important update on SJ Surya's new film

People looking for online information on Dhanush, Sj suryah will find this news story useful.