நடிகர் தனுஷ் குறித்த பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
நடிகர் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்தை நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் தனுஷின் ஹேர் ஸ்டைலை பிரபல ஸ்டைலிஸ்ட் தேவ் சக்தி வேல் வடிவமைத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வாத்தி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில், "என்னுடைய ஸ்டைலை வடிவமைப்பு செய்தது காவ்யா ஶ்ரீ ராம் என்றும் முடி அலங்காரம் செய்தது என்னுடைய ஃபேவரைட் தேவ் சக்திவேல்" என்றும் தனுஷ் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பகிர்ந்த தேவ் சக்திவேல், "வார்த்தைகள் இல்லை. இதைக் குறிப்பிட்ட தனுஷ் சாருக்கு நன்றி. மயக்கம் என்ன படத்தின் மூலம் சினிமாவின் பெரிய லீக்கிற்கு முதல் பிரேக் கொடுத்த தனுஷ் சாருக்கு என்றென்றும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் உங்களை எல்லாவற்றிலும் சிறந்ததாக ஆசீர்வதிப்பார், மேலும் சிறந்த சேவைக்கு சிறந்த குழு தேவைப்படுகிறது. எனது சகோதரர்கள் குழுவின் ஆதரவால் மட்டுமே இது சாத்தியம்" என தேவ் சக்திவேல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேவ் சக்திவேல், ஏற்கனவே மெர்சல், பிகில், பீஸ்ட், ஜகமே தந்திரம், அசுரன், மாறன் ஆகிய படங்களில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான துணிவு & வாரிசு படங்களிலும் தேவ் சக்திவேல் பணிபுரிந்தவர் ஆவார்.