நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டில், "தி கிரே மேன்" திரைப்படத்தின் சிறப்பு திரையிடலில், வேட்டி சட்டையில் வருகை தந்த நடிகர் தனுஷின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
![Dhanush in veshti The Gray Man Mumbai premiere trending Dhanush in veshti The Gray Man Mumbai premiere trending](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/dhanush-in-veshti-the-gray-man-mumbai-premiere-trending-new-home-mob-index.jpeg)
Also Read | அமலாபால் நடிக்கும் புதிய க்ரைம் த்ரில்லர் படம்.. பிரபல OTT-யில் நேரடியாக ரிலீஸா?
மும்பை, 21 ஜூலை 2022: நெட்ஃபிக்ஸ் நிறுவனம் வழங்கும் "தி கிரே மேன்" படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், கோர்ட் ஜென்ட்ரி (ரியான் கோஸ்லிங்), எனும், சியரா சிக்ஸ் மற்றும் ஏஜென்ட் டானி மிராண்டா (அனா டி அர்மாஸ்) ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் தனுஷ் நேருக்கு நேர் மோதும் படம் சம்மந்தமான காட்சிகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி வைரலாகின.
இப்படத்தில் தனுஷ் ஒரு கில்லிங்க் மிஷின் என்று, அதாவது தி கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் "தீவிரமான சக்தி" என்று ஏற்கனவே விவரணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அண்மையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த தி கிரே மேன் திரைப்பட விழாவில் தனுஷின் லுக் வைரலானது.
இப்போது மும்பை பிரீமியர் ஷோவில் நடிகர் தனுஷ் வேட்டி சட்டையில் வருகை தந்ததுடன், இப்படத்தின் இயக்குனர்களான ரூஷோ சகோதரர்களுடனான புகைப்படத்தை தமது ட்விட்டரில் பதிவிட்டு, “வெல்கம் டூ இந்தியா” என குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் ரியான் கோஸ்லிங் தான் தி கிரே மேனாகவும், கிறிஸ் எவன்ஸ் எதிர் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மார்க் கிரேனி எழுதிய தி கிரே மேன் நாவலை அடிப்படையாகக் கொண்டு, ஜோ ரூஷோ, கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலி ஆகியோர் இப்படத்தின் திரைக்கதை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே லண்டனில் சிறப்பு திரையிடல் நடந்த இந்த படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.
Also Read | CM ஸ்டாலினின் மாஸ் நடை.. ARR-ன் துள்ளல் இசை.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான Chess Olympiad Anthem