நெட்ஃபிளிக்ஸின் "தி கிரே மேன்" திரைப்படத்தின் மும்பை சிறப்பு திரையிடலில், தனுஷின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
![Dhanush in Veshti At Mumbai The Gray Man Premier Show Dhanush in Veshti At Mumbai The Gray Man Premier Show](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/dhanush-in-veshti-at-mumbai-the-gray-man-premier-show-new-home-mob-index.jpeg)
Also Read | துல்கர் படத்தில் 'சில்லுனு ஒரு காதல்' பூமிகா-வின் கம்பேக்... ரிலீஸ் எப்போ.?
நெட்ஃபிக்ஸ் நிறுவனம் வழங்கும் "தி கிரே மேன்" படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில், கோர்ட் ஜென்ட்ரி (ரியான் கோஸ்லிங்), எனும், சியரா சிக்ஸ் மற்றும் ஏஜென்ட் டானி மிராண்டா (அனா டி அர்மாஸ்) ஆகியோருடன் தனுஷ் நேருக்கு நேர் சண்டையிடும் காட்சி ஏற்கனவே வெளியாகி வைரலாகி உள்ளது.
தனுஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு கில்லிங்க் மிஷின். தி கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் "தீவிரமான சக்தி" என்று விவரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த தி கிரே மேன் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனுஷின் லுக் செம வைரலானது.
இந்நிலையில் மும்பையில் நடந்த பிரீமியர் ஷோவில் நடிகர் தனுஷ் வெள்ளை நிற வேட்டி சட்டையில் தோன்றி அசத்தியுள்ளார். படத்தின் இயக்குனர்களான ரூஷோ சகோதரர்கள் உடன் இருந்தனர். மேலும் தனுஷ் இந்தி நடிகர் விக்கி கவுஷாலை இந்த நிகழ்வின் போது சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. ஃபேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே ஆகியோரும் வந்திருந்தனர். இந்த படத்திற்கு ஏற்கனவே லண்டனில் சிறப்பு திரையிடல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஜூலை மாதம் 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ரியான் கோஸ்லிங் தான் தி கிரே மேனாகவும், கிறிஸ் எவன்ஸ் அவரது எதிரியாகவும் நடிக்கின்றனர்.
நெட்ஃபிக்ஸ்/ஏஜிபிஓ-தயாரித்த திரில்லரில் ஆண்டனி மற்றும் ஜோ ரூஷோ இயக்கத்தில் அனா டி அர்மாஸ் நடித்துள்ளார், ரெஜே-ஜீன் பேஜ், பில்லி பாப் தோர்ன்டன், ஜெசிகா ஹென்விக், தனுஷ், மோகன், வாக்னர் மற்றும் ஆல்ஃப்ரே வூட்டார்ட் இணைந்து நடித்துள்ளனர்.
மார்க் கிரேனியின் தி கிரே மேன் நாவலை அடிப்படையாகக் கொண்டு, ஜோ ரூஷோ, கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.
Also Read | மருத்துவ சிகிச்சை முடிந்து USA-விலிருந்து இந்தியா திரும்பும் T. ராஜேந்தர்.. முழு விவரம்!