தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ டிரைலர் எப்போது…. மாஸான போஸ்டர்களோடு வெளியான அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஹாலிவுட் படத்தின் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஹாலிவுட்டில் கால்பதித்த தனுஷ்…

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் பிரெஞ்ச் என பல்வேறு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்த தனுஷ், தற்போது ஹாலிவுட்டில் கால்பதித்துள்ளார்.  அவர் நடிக்கும் தி கிரே மேன் திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஒரு சிஐஏ ஏஜெண்டாக கோஸ்லிங் நடித்துள்ளார். MCU படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்த எவன்ஸ், இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இவர்களுடன் தி கிரே மேன் படத்தில், ரெஜ்-ஜீன் பேஜ், அனா டி அர்மாஸ், வாக்னர் மௌரா, பில்லி பாப் தோர்ன்டன் மற்றும் ஆல்ஃப்ரே வுடார்ட் ஆகியோரும் நடித்துள்ளனர். மார்க் கிரேனியின் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் $200 மில்லியன் பட்ஜெட்டில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள்….

சமீபத்தில் இந்த படத்தில் தனுஷின் முதல் லுக் வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றது. இந்த படம் பற்றி  தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “நெட்ஃபிளிக்ஸ்காக ரஸ்ஸோ பிரதர்ஸ் ('அவெஞ்சர்ஸ்', 'கேப்டன் அமெரிக்கா: வின்டர் சோல்ஜர்') இயக்க, ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் நடிக்கும் 'தி கிரே மேன்' படத்தில் நான் சேரப் போவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அற்புதமான அதிரடி அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எனக்குக் காட்டி வரும் அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் உலகம் முழுவதிலும் உள்ள எனது அன்பான ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அனைவரையும் நேசிக்கிறேன். அன்பை பரப்புங்கள்… !" என தெரிவித்திருந்தார்.

டிரைலர் எப்போது…

இந்த படத்துக்கான தனி எமோஜி டிவிட்டரில் தற்போது வெளியிடப்பட்டது. படம் ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலர் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரைலர் நாளை வெளியாகும் என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. மேலும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மாஸ், தனுஷ் உள்ளிட்டோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush hollywood movie The Gray Man trailer release update

People looking for online information on Ana de Armas, Dhanush, Ryan gosling, The Gray Man will find this news story useful.