'வா வாத்தி' பாடலை பாடி அசத்திய சிறுமி மேக்னா😍 .. தனுஷ் & GVP சொன்ன கமெண்ட்ஸ்! CUTE வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'.

Advertising
>
Advertising

Also Read | "யூடியூப் சேனல் ஹேக் ஆயிடுச்சு".. குக் வித் கோமாளி புகழ் பதிவிட்ட பரபரப்பு Post !

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது.
கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது. 

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள். 

வாத்தி (Sir)’ படம் வரும்   ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதிக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இந்த படத்தின் முதல் சிங்கிள்  "வா வாத்தி" என்ற பாடல் தனுஷ் எழுத்தில் ஸ்வேதா மோகன் குரலில் சிலநாட்களுக்கு முன் வெளியானது.

இந்த 'வா வாத்தி' பாடல் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இச்சூழலில் பிரபலமாகி வரும் பாடகி மேக்னா சுமேஷ் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மேக்னா, சமீபத்தில் வா வாத்தி பாடலை பாடி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரைச் சார்ந்த மேக்னா மலையாளத்தில் ஒளிபரப்பாகும் டிவி பாடல் நிகழ்ச்சியான டாப் சிங்கர் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். சமீபத்தில் இவர் பாடிய வா வாத்தி பாடலை இசையமைப்பாளர் பிரகாஷ் குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை கேட்டு நடிகர் தனுஷ், "ஏஞ்சல் மாதிரி ஸ்வீட் வாய்ஸ்" என கமெண்ட் செய்ததாக மேக்னா பேட்டியில் கூறியுள்ளார்.

Also Read | "தன்மையான மனிதர்".!! துணிவு லுக்கில் அஜித்.. பிரபல நடிகரின் மேனேஜர் பகிர்ந்த Pics..

'வா வாத்தி' பாடலை பாடி அசத்திய சிறுமி மேக்னா😍 .. தனுஷ் & GVP சொன்ன கமெண்ட்ஸ்! CUTE வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush GVP comments About singer Meghna Sumesh

People looking for online information on Dhanush, Dhanush GVP comments, Singer Meghna Sumesh, Vaathi Movie will find this news story useful.