"தி கிரே மேன்.." ரிலீஸுக்கு பிறகு தனுஷ் கொடுத்த 'அதிரடி' அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரைப்படங்கள் மூலம் அறிமுகமான தனுஷ், தன்னுடைய அசாத்திய நடிப்பு திறனால், அடுத்தடுத்து சிறந்த படைப்புகளில் நடித்திருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | இளம் இசை அமைப்பாளருடன் கைகோர்த்த யுவன்.. "காஃபி வித் காதல்" படத்தின் அடுத்த பாடல் அப்டேட்!!

இதன் காரணமாக கோலிவுட் தாண்டி, பாலிவுட்டில் கால் பதித்த தனுஷ், சர்வதேச அளவிலும் அதிக கவனத்தை ஈர்த்திருந்தார்.

அந்த வகையில், 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ள ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் "தி கிரே மேன்" என்ற ஹாலிவுட் படத்திலும் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங், அனா டி அர்மாஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

'தி கிரே மேன்' திரைப்படம், கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி இருந்தது. அது மட்டுமில்லாமல், மக்கள் மத்தியில் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சிறந்த வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தனுஷ் காட்சிகள் உலகளவில் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

முன்னதாக, தி கிரே மேன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் தி கிரே மேன் படத்தின் இயக்குனர்களான ருஸ்ஸோ பிரதர்ஸ் ஆகியோருடன், உலகின் நிறைய நாடுகளில் கலந்து கொண்டிருந்தார் தனுஷ்.

இந்நிலையில், தி கிரே மேன் திரைப்படத்தின் அடுத்த பாகம் குறித்து நடிகர் தனுஷ் அசத்தலான அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் படி, Lone Wolf என்ற பெயருடன் தி கிரே மேன் படத்தில் தனுஷ் வந்த நிலையில், அதனை குறிப்பிட்டு ஆடியோ கிளிப் ஒன்றுடன், "கிரே மேன் பிரபஞ்சம் விரிவடைகிறது. அதன் அடுத்த பாகமும் வருகிறது. Lone Wolf தயார். நீங்களும் தயாரா?" என கேப்ஷனில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

"தி கிரே மேன்" படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்த பாகமும் உருவாக உள்ளது மட்டுமில்லாமல், அதில் தனுஷ் இருப்பதும் உறுதியாகி இருப்பதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

 

Also Read | "யார் பேராச்சும் மறந்துட்டனா..?" - 'விருமன்' பட விழாவில் மகள் அதிதிக்கு ஷங்கரின் க்யூட் Reminder.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush confirms about the gray man sequel

People looking for online information on Dhanush, The Gray Man will find this news story useful.