தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் புதிய அப்டேட் பிரத்யேகமாக நமக்கு கிடைத்துள்ளது.
தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது.
‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்க உள்ளார்.
Also Read | பிரபல OTT-யில் நேரடியாக ரிலீஸாகும் 'கோலி சோடா' படத்தின் மூன்றாம் பாகம்? படத்துக்கு பேரு இதானா?
பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் நாகூரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, த.ராமலிங்கம் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார். பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றனர். மாஸ்டர் திலீப் சுப்பராயன், சண்டை காட்சி இயக்கத்தை கவனிக்க உள்ளார், Tuney John பப்ளிசிட்டி டிசைனராக பணிபுரிய உள்ளார். இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.
கேப்டன் மில்லர் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 120 நாட்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. Madras Regiment-ன் ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்ட நிலையில் தனுஷின் பிம்பம் போஸ்டரில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "அஜித் & அவரின் BMW" .. தீயாய் பரவும் மேனேஜர் சுரேஷ் சந்திரா பகிர்ந்த ஸ்டைலிஷ் PHOTOS!