வாத்தி இசை வெளியீட்டு விழாவில் மகன்களுடன் தனுஷ்! ட்ரெண்ட் ஆகும் புகைப்படங்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் தனது மகன்களுடன் கலந்து கொண்டுள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி) சென்னை சிறுகளத்தூர் சாய் லியோ நகரில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடந்து வருகிறது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா & யாத்ரா உடன் கலந்து கொண்டார். தனுஷ் அருகில் இரண்டு மகன்களும் அமர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.  இந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் நீண்ட மீசை தாடியுடன் புதிய லுக்கில் வந்து கலந்து கொண்டுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர்  திரைப்படம் தனுஷ் நடிப்பில் அடுத்து உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Attending Vaathi Audio Launch with His Sons

People looking for online information on Dhanush, Linga, Vaathi, Yatra will find this news story useful.