ராணுவ வீரனாக தனுஷ் நடிக்கும் புதிய பீரியட் படம்.. மரண மாஸ் போஸ்டருடன் வெளியான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ், தமிழைத் தொடர்ந்து இந்தி, பிரஞ்சு, ஹாலிவுட் என பல மொழி, நாட்டு திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகர் தனுஷ் தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | துபாயில் கமல்ஹாசனை கொஞ்சிய சிறுவன்.. ஆண்டவர் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ! முழு தகவல்

தான் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக டிவிட்டரில் தனுஷ் சில மாதங்களுக்கு முன் அறிவித்துள்ளார். அதில் "ஆம். யூகங்கள் உண்மைதான். நான் தான் அந்த அதிர்ஷ்டசாலி நடிகர் அருண் மாதேஸ்வரன் எனது அடுத்த இயக்குனர். மேலும் விவரங்கள் விரைவில். ஓம் நமசிவாய" என டிவீட் செய்து இருந்தார்.

இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் - தனுஷ் இணையும் பீரியட் படத்தின் அறிவிப்பு நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. பழமையான ஆயுதத்துடன் The Madras Regiment என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ரெஜிமென்ட் இந்திய ராணுவத்தின் பழமையான காலாட்படை படைப்பிரிவு ஆகும், இது 1750 களில் தோன்றியது. பிரித்தானிய இந்திய இராணுவம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இராணுவம் ஆகிய இரண்டு அரச அமைப்புகளின் கீழ் பல சண்டைகளில் இந்த ரெஜிமென்ட் பங்கேற்றுள்ளது. இதன் தலைமையிடம் உதக மண்டலத்தில் உள்ள வெல்லிங்டன் ஆகும்.

தற்போது தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தனுஷ் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Also Read | புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செம அறிவிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Arun Matheshwaran New Movie Update Announcement

People looking for online information on Arun Matheshwaran, Dhanush, Dhanush Arun Matheshwaran New Movie will find this news story useful.