திருச்சிற்றம்பலம் படத்தின் FDFS.. ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ் & அனிருத்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து தனுஷ் & அனிருத் கண்டு களித்தனர்.

Advertising
>
Advertising

Also Read | 90S ‘ஈரமான ரோஜாவே’ பட ஹீரோயினா இவங்க? இப்போ ஆன்மீக போதகரா? எப்படி இருக்காங்க பாருங்க.!

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

இப்படம் இன்று ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இன்று காலை 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர்.

ரசிகர்கள் விசில் சத்தமும் ஆரவாரமான கைதட்டலுக்கு மத்தியில் படம் பார்த்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார்.



'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடிக்கிறார்கள்.

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

Also Read | தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்'.. தமிழ்நாட்ல இத்தனை தியேட்டர்ல ரிலீசா? ஏரியா வாரியாக முழு LIST!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Anirudh Watching Thiruchitrambalam Movie FDFS at Rohini Silver Screen

People looking for online information on Anirudh Ravichander, Dhanush, Rohini Silver Screen, Thiruchitrambalam, Thiruchitrambalam FDFS will find this news story useful.