தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இதை தொடர்ந்து ஹிந்தியில் அத்ராங்கி ரே, மாரி செல்வராஜுடன் கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அடுத்ததாக மித்ரன் ஜவகர், கார்த்திக் நரேன், ராட்சசன் ராம்குமார் என பல்வேறு இயக்குநர்களின் திரைப்படங்களில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ஹாலிவுட்டில் ருஸோ பிரதர்ஸ் இயக்கும் தி கிரே மேன் திரைப்படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் - செல்வராகவன் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் ஆரம்பமாகியுள்ளது. இதை தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு 'நானே வருவேன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். யுவன் இசையமைக்கும் இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். "இந்த வேகத்தில் எந்த படத்திற்கும் தயாரிப்புக்கு முன் வேலை செய்யவில்லை! ஷூட்டிங்கிற்கு வேகமாக முன்னேறுகிறோம்".. என்று உற்சாகத்துடன் அப்டேட் கூறியுள்ளார்.