தனுஷ் - அக்‌ஷய் குமார் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி.. மதுரையில் ஷூட்டிங்.! - தெறி தகவல்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் ஷூட்டிங் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மேலும் இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம், கார்த்திக் நரேனின் D43 உள்ளிட்ட படங்களில் பிசியாகவுள்ளார். இதனிடையே ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பாலிவுட் திரைப்படம்தான் அத்ராங்கி ரே. 

இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் அத்ராங்கி ரே படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சினிமா ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி வழங்குவதையடுத்து, மதுரையில் இத்திரைப்படத்தின் 2-வது ஷெட்யூலை நடத்த திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு. அக்‌ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் நடிக்கும் பாலிவுட் பட ஷூட்டிங் விவரங்கள் | Dhanush akshay kumar starring atrangi re shooting details

People looking for online information on Akshay Kumar, Dhanush, Sara Ali Khan will find this news story useful.