தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து - டிவிட்டரில் ரஜினி - தனுஷ் ரசிகர்களின் கருத்துக்கள்.. ஒரு பார்வை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி ரஜினி - தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்

Advertising
>
Advertising

நடிகர் தனுஷ் தனது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார். நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்த தம்பதியின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி ரசிகர்கள் கருத்தை பார்க்கலாம்.

தனுஷ், ஐஸ்வர்யா உடன் பாடும் இந்த வீடியோவை பதிவிட்டு இதயம் நொறுங்கி விட்டதாகவும், எல்லாம் சரியாகிடும் என்றும், இருவருக்கும் இதை தாண்டி மீண்டு வர இறைவன் வல்லமை தர வேண்டும் என்றும் டிவீட் செய்துள்ளார்.

 

விவாகரத்து என்பது தனிப்பட்ட விடயம், அதில் ரசிகர்கள் தலையிட்க்கூடாது என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

ரஜினி பற்றி நினைப்பதாகவும், ஏற்கனவே சௌந்தர்யா விவாகரத்தின் போதும், இப்போது ஐஸ்வர்யா விவாகரத்தும் உணர்ச்சிவயமான தாக்கத்தை ரஜினிக்கு ஏற்ப்படுத்தி இருக்கலாம் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் தைரியாக இருங்க தலைவா என ரஜினிகாந்தை குறிப்பிட்டு இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார். 

இந்த பிரச்சினை எல்லாம் தெரிந்து தான், 71 வயதிலும் பொங்கல், புத்தாண்டிற்கு வீட்டுக்கு வந்த ரசிகர்ளை மகிழ்வுடன் ரஜினி சந்தித்ததாகவும் இந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த விவாகரத்து செய்தி பரவும் போதே ரஜினியின் மகிழ்ச்சி போய்விட்டதாகவும், இந்த வயதில் எந்த ஒரு தந்தைக்கும் இது நடக்க கூடாது என்றும், ரஜினி இதில் இருந்து மீள இறைவன் அருள் புரிய வேண்டும் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார். 

விவாகரத்து குறித்து தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். 18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்புபவர்களாக ஒருவரையொருவர் இணைத்து... வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு,எனப் பயணம் செய்தோம்.. இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்... இருவரும் ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனிப்பட்டவர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும். என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து  '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது லைகா நிறுவனத்துக்காக புதிய படத்தை இயக்க உள்ளார். அதே போல் தனுஷ் நடிப்பில் பிப்ரவரியில் மாறன் படமும், அடுத்தாக திருச்சிற்றம்பலம் படங்களின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன, நானே வருவேன் படம் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து உருவாகி வருகின்றது. சமீபத்தில் தமிழ் - தெலுங்கு படமான வாத்தியில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush aishwarya rajinikanth divorce fans reaction in twitter

People looking for online information on Aishwaryaa, Dhanush, Dhanush Divorce, Divorce, Fans Reaction, Rajinikanth will find this news story useful.