"பாகுபலி ரூ.150 கோடில ஆரம்பிச்சுது... REAL பட்ஜெட்டை சொன்னா".. தனஞ்செயன் அதிரடி பேட்டி! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மையில் இயக்குநர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் பட்ஜெட்டை, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மிகைப்படுத்தி கூற வேண்டி இருந்ததாகவும், அது தவறு என்று தற்போது உணர்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி Behindwoods-ல் தொடரப்பட்டது.

இதில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “மக்கள் மத்தியில் ஒரு படத்தின் பட்ஜெட் உதாரணத்துக்கு 2 லட்சம் ரூபாய் என்று சொன்னாலே அது 1 லட்சம் ரூபாய் தான் என மைண்ட் செட் செய்துகொள்கிறார்கள். அதாவது எந்த விலை சொன்னாலும் அதை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்.

எனவே பட்ஜெட்டை மிகைப்படுத்தி சொல்வது வியாபார தந்திரம். அதை ஒரு கிரிமினல் குற்றம் அல்லது தவறு என்று கூற வேண்டியதற்கான முகாந்திரம் இல்லை.

பாகுபலி தொடங்கும்போது 150 கோடி என தொடங்கி, படம் முடியும்போது 500 கோடி ரூபாய் வரை சொல்லப்பட்டது. இவ்வாறு பட்ஜெட்டை அதிகப்படுத்தி சொல்லும்போது எதிர்பார்ப்பும் வியாபாரமும் அதிகமாகிறது.

ஒருவேளை உண்மையான பட்ஜெட் 5 கோடி ரூபாய் என்றால், அதை அதிகம் என நினைத்து, 3 கோடி ரூபாய்க்கு தான் கேட்பார்கள். எனவே அந்த படத்தை 3 கோடி ரூபாய்க்குதான் வியாபாரம் செய்ய முடியும். நேர்மையான பட்ஜெட்டை சொல்லி வியாபாரம் செய்ய முடியாது!” என தெரிவித்துள்ளர்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் பிரபலங்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சியின் முழு வீடியோவை இணைப்பில் காணலாம். 

"பாகுபலி ரூ.150 கோடில ஆரம்பிச்சுது... REAL பட்ஜெட்டை சொன்னா".. தனஞ்செயன் அதிரடி பேட்டி! VIDEO வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhananjayan over Budget exaggeration interview தனஞ்செயன்

People looking for online information on Dhananjayan, Interview will find this news story useful.