பாத்ரூமில் வாந்தி எடுத்த தனலட்சுமி.. ஓடி போய் உதவிய ஆயிஷா.. "என்ன நடந்துச்சு?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் ஒன்றின் காரணமாக ஏராளமான பிரச்சனைகள் உருவாகி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "கோவக்காரன் தான்.. பாவக்காரன் இல்ல‌..".. வெளியேறுவது குறித்து அசீம் பரபரப்பு பேச்சு

இதனால் கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது. பொம்மை டாஸ்க்கிற்கு முன்பு வரை கூட சண்டை போட்டாலும் உடனடியாக ஒட்டி விடுவார்கள். ஆனால், இந்த டாஸ்க்கிற்கு பிறகு தொடர்ந்து சண்டை என வாரம் முழுக்க ஓயாமல் அரங்கேறி வருகிறது.

இதில் ஷெரினாவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே தான் இருக்கின்றனர். ஆரம்பத்தில் மணிகண்டன் கோபம் அடைய, இதன் பின்னர் டாஸ்க்கில் ஏற்பட்ட மோதலால் அசீம், தனலட்சுமி, அமுதவாணன், விக்ரமன் உள்ளிட்ட பல போட்டியாளர்களிடையே மாறி மாறி விவாதங்கள் தான் நடந்து வருகிறது.

மேலும் தனலட்சுமிக்கு ஆதரவாக மகேஸ்வரி, ADK, அசீம் உள்ளிட்ட போட்டியாளர்களிடமும் விக்ரமன் கேள்வி கேட்கிறார். அதில், தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டார் என்பதில் உறுதியாக இருக்கிறார் அசீம். மறுபக்கம் அதில் உறுதி இல்லை என்றும் விக்ரமன் கூறுகிறார். இதனால் வார இறுதியில் முறையான ஆவணங்களுடன் கமல்ஹாசன் வந்தால் தான் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பொம்மை டாஸ்க்கிற்கு இடையே Luxury Budget டாஸ்க்கும் பிக்பாஸ் வீட்டில் நடந்து வருகிறது. இந்த டாஸ்க்கில்  மணிகண்டன், ரச்சிதா, ஜனனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தனலட்சுமியும் இந்த டாஸ்க்கில் கலந்து கொண்டிருந்தார். ஆரஞ்ச் சோடா மற்றும் ஆம்லெட் சேர்ந்த கலவையை குடிக்க வேண்டும் என்ற சவால் அவருக்கு வைக்கப்பட்டது.

மிகவும் கஷ்டப்பட்டு இதனை குடித்து முடித்த தனலட்சுமி, Luxury Budget டாஸ்க்கையும் வென்றிருந்தார். தொடர்ந்து, அந்த கலவையை குடித்ததன் பெயரில் தனலட்சுமி வாந்தி எடுக்க தொடங்கியதாகவும் தெரிகிறது. அப்போது அவர் அருகே இருந்த ஆயிஷா, அவருக்கு ஓடி போய் உதவியும் செய்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

Also Read | பொங்கல் ரேஸில் வாரிசு - துணிவு .. 8 வருடத்திற்கு பின் எதிர்பார்ப்பில் விஜய் - அஜித் fans.!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi vomit after luxury budget task ayesha helps

People looking for online information on Ayesha, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmi, Vijay Television, Vijay tv will find this news story useful.