பிக் பாஸ் வீட்டிற்குள் SURPRISE என்ட்ரி கொடுத்த தனா.. அவங்க கையில் இருந்த டாட்டூவ கவனிச்சீங்களா!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | "என் கூட இன்னொரு முறை துணிவு பாரு".. மனைவிக்கு ட்வீட் செய்த 'மங்காத்தா' தயாநிதி அழகிரி!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்ட சிலரும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது தனலட்சுமியும் சர்ப்ரைஸாக நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த தனலட்சுமி, தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளது பல போட்டியாளர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்துள்ளது. அனைவரும் அவரை கட்டித் தழுவி வரவேற்றிருந்த நிலையில், பழைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருவது பார்வையாளர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

இதற்கு மத்தியில், அமுதவாணனுக்கு டாஸ்க் கொடுக்கும் பிக் பாஸ், அவரது முடி முழுவதும் ப்ரவுன் நிறத்தில் மாற்ற வேண்டும் என தெரிவிக்கிறார். இந்த நிலையில், தனலட்சுமி கையில் போட்டுள்ள டாட்டூ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் லோகோ ஒரு கண்ணை போன்று இருக்கும். அதே போன்றொரு டாட்டூவை தான் தனது கையில் பச்சை குத்தி உள்ளார் தனலட்சுமி. இதனை சில போட்டியாளர்கள் கூட வியப்புடன் பார்த்தனர்.

Also Read | GP முத்துவுக்கு ஷாக் கொடுத்த அசீம் & மைனா.. தலைவர் கொடுத்த கமெண்ட் 😅

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi surprise entry in bigg boss house housemates reaction

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Dhanalakshmi, Dhanalakshmi surprise entry in bigg boss house will find this news story useful.