அசீமை வச்சு ROAST பண்ணிய தனா.. உடனே பிக்பாஸ் சொன்ன கமெண்ட் தான்.. மொத்த பேரும் சிரிச்சிட்டாங்க😂..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | மணிகண்டாவின் சர்ப்ரைஸை முன்கூட்டியே கண்டுபிடிச்ச ADK.. இன்றைய பிக்பாசில்..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் தனலட்சுமி. சர்ப்ரைஸாக வீட்டுக்குள் வந்த தனாவிடம் போட்டியாளர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மக்களிடம் கிடைத்த வரவேற்பு பற்றி தனா போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இதனிடையே அங்குவரும் அசீம், "வெளியில ரீச் எப்படி இருக்கு?" என தனாவிடம் கேட்கிறார்.

அப்போது வாங்க என்று அசீமின் கைபிடித்து கேட் அருகே அழைத்துச் சென்று,"பிக்பாஸ் கேட்டை திறங்க, அசீமுக்கு வெளியே ரீச் எப்படி இருக்குனு பாக்கணுமாம்" என தனா சொல்ல, அசீம் அங்கிருந்து சிரித்தபடியே திரும்பிச் செல்கிறார். அப்போது பிக்பாஸ் "தனா, குட் ஒன்" எனச் சொல்ல வீட்டில் இருந்த அனைவரும் சிரித்துவிடுகின்றனர்.

Also Read | "நீ வெளியே போனப்போ அந்த ஒரு விஷயம் Guilt-ஆ இருந்துச்சு".. அசலிடம் Feel பண்ணி பேசிய விக்ரமன்..!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi roast to Azeem and Biggboss appreciate

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Dhanalakshmi will find this news story useful.