பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் கலகலப்பாக போட்டியாளர்கள் இருந்து வந்தாலும் டாஸ்க் என வந்து விட்டால் வீடே ரெண்டாகி விடுவது போல பிரச்சனைகளும் புதிது புதிதாக உருவாகிறது.
Also Read | "இந்தா வந்துருச்சுல Court டாஸ்க்கு".. ஆரம்பமே சும்மா தீப்பறக்குது.. விக்ரமன் மீது பாய்ந்த வழக்கு!!
அந்த வகையில், கோர்ட் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சில பரபரப்பு சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி வருகிறது.
முன்னதாக பொம்மை டாஸ்க் மற்றும் ஃபேக்டரி டாஸ்க் இடையே பல குழப்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி இருந்தது. இதன் பெயரில் அடுத்தடுத்து பல போட்டியாளர்கள் இடையே கூட சண்டை வெடித்து கலவரத்தையே பிக்பாஸ் வீட்டிற்குள் உருவாக்கி விட்டது. இதே போல தான் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜா ராணி டாஸ்க் இடையே கூட அசீம் மற்றும் விக்ரமன் மோதிக் கொண்டது உள்ளிட்ட பல சலசலப்பு சம்பவங்கள் நடந்திருந்தது.
டாஸ்க் என்று வந்து விட்டால் பிக்பாஸ் வீட்டிற்குள் தீப்பறக்கும் அதே வேளையில், சில போட்டியாளர்களும் வார இறுதியில் வெளியேறி இருந்தனர். ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார். இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர்.
நிவாஷினி வெளியேறியதை தொடர்ந்து, சமீபத்தில் நடந்த நாமினேஷன் இந்த சீசனின் முதல் Open நாமினேஷனாக இருந்தது. சக போட்டியாளர்கள் மத்தியில் தாங்கள் எலிமினேஷன் சுற்றுக்கு நாமினேட் செய்யும் 2 போட்டியாளர்கள் பெயரை அறிவிக்க வேண்டும். அதன்படி, பலரும் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளர்கள் பெயரை அறிவித்திருந்தனர்.
இதற்கு மத்தியில் இந்த வார தலைவராக மைனா நந்தினி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இதில் உடன்படாத தனலட்சுமி, மிகவும் கலக்கத்துடனும் இருந்து வந்திருந்தார். அப்படி ஒரு சூழலில், நீதிமன்ற டாஸ்க்கில் அதிரடி முடிவு ஒன்றை தனலட்சுமி எடுத்துள்ளார்.
புதிய டாஸ்க்கின் படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்கிறார்கள். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
அப்படி ஆயிஷாவிடம் பேசி கொண்டிருக்கும் தனலட்சுமி, "தலைவர் டாஸ்க்குங்கிறது பெரிய டாஸ்க். இதுக்கு முன்னாடி 40 நாள் இருந்த வீட்ட வித்தியாசமா ஒரு இதுல காமிக்கண்ணும்ன்னு ஆர்வமா இருந்தேன். யாருக்கும் புரியமாட்டேங்குது" என தான் தலைவர் ஆக முடியவில்லை என்ற ஆதங்கத்தில் கூறுகிறார். மேலும் இந்த கேப்டன் விவகாரத்தை தனலட்சுமி நீதிமன்ற டாஸ்க்கில் கையில் எடுப்பதாகவும் தெரிகிறது.
இதன் பின்னர் பேசும் ஆயிஷா, "நீ இந்த கேஸ எடுத்தது கூட ஒரு நல்ல விஷயம்ன்னு எனக்கு இப்ப தோணுது" என தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து, தனலட்சுமி வழக்கிற்காக ஆயிஷா வழக்கறிஞராக தோன்றுகிறார். அப்போது, ஷிவின் மற்றும் மைனா நந்தினி ஆகியோரை தங்களின் சாட்சியாக ஆயிஷா அறிவிக்க, அவர்கள் இருவரிடமும் சாட்சியாக இருக்க சம்மதமா என்றும் பிக்பாஸ் கேட்கிறார்.
ஆனால் இதற்கு மைனா மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் சம்மதம் இல்லை என தெரிவிக்கிறார். தனது வழக்கில் சாட்சியமாக மாற சம்மதமில்லை என இருவரும் கூறியதால் அதிருப்தியில் இருக்கும் தனலட்சுமி, "இனி என் கேமை எப்படி விளையாடுறேன்னு மட்டும் பாருங்க" என ஆயிஷாவிடம் தெரிவிக்கிறார்.
Also Read | "உங்ககிட்ட பேச விருப்பமில்ல".. ADK பேச்சை எதிர்த்த பிறகு வெளியேறிய ஷிவின்.. Task வந்தாலே கலவரம் தான்