"மரியாதை பத்தி இவரு பேசுறாரான்னு". அசீம் ஆசை நிறைவேறும் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தனா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன் ஒவ்வொரு நாளும் பல்வேறு விறுவிறுப்பான விஷயங்கள் நிறைந்து தான் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | சசிகுமார் நடிப்பில் 'காரி'.. ரிலீஸ் நாளில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தரப்போகும் சர்ப்ரைஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், ஏகப்பட்ட சண்டைகள் மற்றும் அதே வேளையில் கலகலப்பான விஷயங்கள் கூட அவ்வப்போதும் அரங்கேறி வருகிறது.

இதற்கு மத்தியில், டாஸ்க் என வந்து விட்டால் நிச்சயம் போட்டியாளர்கள் மத்தியில் மாறி மாறி களேபரங்கள் தான் நடைபெறும்.

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க் உள்ளிட்ட இரண்டு டாஸ்க்குகள் காரணமாக கடந்த சில எபிசோடுகளில் பல போட்டியாளர்கள் மத்தியில் சண்டை வெடித்திருந்தது. இதன் காரணமாக உருவான பல பிரச்சனைகளுக்கும் வார இறுதியில் வந்த கமல்ஹாசன் விடை அளித்திருந்தார். தொடர்ந்து, மீண்டும் வாரத்தின் தொடக்கத்தில் நிதானமாக ஆரம்பிக்கும் பிக்பாஸ், டாஸ்க் பெயரில் டாப் கியர் எடுக்கும்.

இதற்கு மத்தியில், ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார். இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தனர். தொடர்ந்து, தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் மீண்டும் தங்களின் ஸ்டைலில் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில் தற்போது புதிய வகையில்  நாமினேஷன் நடைபெறுகிறது. முன்னதாக, போட்டியாளர் அசீம் கூட பிக்பாஸ் வீட்டில் எப்போது ஓப்பன் நாமினேஷன் (சக போட்டியாளர்கள் முன்பு வெளிப்படையாக நாமினேட் செய்வது) நடைபெறும் என மற்ற போட்டியாளர்களிடம் எதிர்பார்ப்புடன் கேட்டுக் கொண்டே இருந்தார். இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு போட்டியாளரும் அனைவர் முன்னிலையில் தாங்கள் நாமினேட் செய்யயும் போட்டியாளர்கள் பெயரை தெரிவிக்கின்றனர். அப்போது தனா மற்றும் ராம் ஆகியோரை அசீம் நாமினேட் செய்கிறார். சுயமாக ராம் நிறைய முடிவு எடுக்க வேண்டும் என்றும் சோம்பேறித்தனமாக இருப்பதையும் குறிப்பிட்டு ராமை நாமினேட் செய்கிறார் அசீம். இதன் பின்னர், தனாவை பற்றி பேசும் அசீம், பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது பற்றி அந்த பெண்ணுக்கு தெரியவில்லை என்றும் கூறுகிறார்.

அதன் பின்னர் வரும் தனலட்சுமி, அசீம் மற்றும் மணிகண்டா ஆகியோரை நாமினேட் செய்கிறார். இதில், அசீமை நாமினேட் செயத்தற்கான காரணம் குறித்து பேசும் தனலட்சுமி, "இப்போ ஒரு கேம் விளையாடிட்டு இருக்காங்கன்னா, தான் கேம் எப்படி விளையாடனும்னு பாக்கணும். அவன நோண்டிவிட்டு அவன் Vibe ஆனதுக்கு அப்புறமா நம்ம கேமை ஆடணும்ன்னு நினைக்க கூடாது. அது ஒரு காரணம், இன்னொரு காரணம் என்னன்னா மரியாதை பத்தி அவரு இங்க பேசினார். அதைக் கேட்டதும் இவர் என்னடா அதை பத்தி பேசுறார்ங்குற மாதிரி தான் இருந்தது" என தனலட்சுமி கூறினார்.

அசீம், தனலட்சுமியை போல மற்ற போட்டியாளர்களும் இரண்டு பேரை நாமினேஷன் வெளிப்படையாக நாமினேட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'காதல் ரோஜாவே' .. கீ-போர்டில் வாசித்த சுட்டிக் குழந்தை.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த வீடியோ..

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi and azeem in open nomination biggboss house

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmim, Vijay Television, Vijay tv will find this news story useful.