"அமுது, ஜனனி அப்போ ஃபேவரைட், ஆனா இப்போ..".. LIVE -ல் பேசிய தனா BIGG BOSS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

Also Read | Task நடுவே திடீர்ன்னு சத்தம் போட்டு கத்திய விக்ரமன்... வாயை பொத்தி சிரிச்ச ஷிவின்.. இதுக்காக தானா?

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் திறனை நிரூபித்தும் வருகிறார்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், போட்டியாளராக இருந்த தனலட்சுமி முதல் முறையாக லைவில் தோன்றி உள்ளார். முன்னதாக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்று வரை முன்னேறுவர் என எதிர்பார்க்கப்பட்ட தனலட்சுமி, திடீரென வெளியேறி இருந்தது, பார்வையாளர்கள் பலரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

தொடர்ந்து, தன்னுடைய கேமை ஆடி கேள்விகளை எழுப்பியும் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டும் வந்த தனலட்சுமி, திடீரென வெளியேறி இருந்தது அந்த சமயத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி இருந்தது. அது மட்டுமில்லாமல், தொடர்ந்து எந்தவொரு வீடியோக்களோ, அல்லது நேரலையிலோ தனலட்சுமி இடம்பெற்றதாகவும் தெரியிவில்லை. இதனால், பிக் பாஸ் வீட்டில் சீக்ரெட் அறையில் தனலட்சுமி இருக்கிறார் என்றும் விரைவில் அவர் திரும்ப வருவார் என்றும் கூட சில கருத்துக்கள் பரவி இருந்தது.

அப்படி இருக்கும் நிலையில், தற்போது அந்த கருத்துக்கள் அனைத்தையும் உடைத்து விஜய் டிவியின் நேரலையில் தோன்றி உள்ளார் தனலட்சுமி. இதில், பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் தான் ஆடிய கேம் குறித்தும் மற்ற போட்டியாளர்கள் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து மனம் நெகிழ்ந்து பேசி இருந்த தனலட்சுமி, தனது ஃபேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது பற்றி குறிப்பிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், "அசிம், கதிரவன், மணி தான் என்னோட ஃபேவரைட் போட்டியாளர்கள். 

எபிசோடு பாக்குறது முன்னாடி வரைக்கும் அமுதவாணன், ஜனனி எல்லாரும் பேவரைட்டா இருந்தாங்க. ஆனா, எபிசோடு பாதத்துக்கு அப்புறம் அவங்க எல்லாரும் மாறிட்டாங்க. இப்போ நான் வெளியே இருக்குற ஆடியன்ஸ் மாதிரி" என தெரிவித்தார்.

அதே போல, ப்ரோமோக்கள் பற்றி பேசி இருந்த தனலட்சுமி, அனைத்து ப்ரோமோக்களையும் பார்த்து விட்டேன் என்றும், அனைத்திலும் என்னுடைய முகம் இருப்பது ஜாலியாக இருக்கிறது என்றும் சிரித்துக் கொண்டே வெட்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

Also Read | Breaking : எலிமினேஷனுக்கு பிறகு முதல் நேரலையில் தோன்றிய தனலட்சுமி Bigg Boss

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi about her favourite contestants in bigg boss house

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Dhanalakshmi, Dhanalakshmi favourite contestants, Dhanalakshmi live after elimination will find this news story useful.