"சும்மா ஒண்ணும் வெளிய அனுப்பல!".. எலிமினேஷன் பற்றி மனம்திறந்த தனலட்சுமி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read| "என்னது, விக்ரமன் பொய் சொன்னாரா?".. பழைய சம்பவத்தை தோண்டி எடுத்த போட்டியாளர்!!

முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில்,   Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் Guest ஆக வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர்.

முன்னதாக, பிக் பாஸ் Finale வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தனலட்சுமி, திடீரென பாதியில் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலரையும் ஏமாற்றம் அடைய வைத்திருந்தது. இது தொடர்பாக பலரும் இணையத்தில் அவர் இப்போது வெளியேறி இருக்கக் கூடாது என்றும் இறுதி சுற்று வரை முன்னேறி இருக்க வேண்டிய ஒரு போட்டியாளர் என்றும் தனாவுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அப்படி இருக்கையில், தற்போது விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ள தனலட்சுமி மைனாவிடம் தன்னுடைய எலிமினேஷன் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது பேசும் மைனா நந்தினி, "நீயும், மணிகண்டாவும் இந்த பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்திருக்கணும் அப்படின்னு தோணுச்சு. தனா வெளிய போனதும் இனிமே என்ன வேணா நடக்கலாம்ன்னு பேசிட்டு இருந்தோம். நீ எபிசோடு பார்த்திருந்தால் தெரிஞ்சுருக்கும். தனா, அசிம், விக்ரமன், ஷிவின் இந்த நாலு பேரையும் எலிமினேட்டே பண்ணமாட்டாங்க அப்படின்னு என்னோட புரிதல் இருந்துச்சு" என தெரிவித்தார்.

இதனையடுத்து தன்னுடைய எலிமினேஷன் குறித்து பேசும் தனலட்சுமி, "இவங்க என்ன சும்மா எல்லாம் அனுப்பல. டைட்டில் கையில கெடைச்சா என்ன மரியாதை கிடைக்குமோ அந்த அளவுக்கு பண்ணி தான் அனுப்புனாங்க. இது ஏதோ நல்ல விஷயத்துக்காக தான் பண்ணி இருக்கிற மாதிரி தான் எனக்கு தோணுது. ஏன்னா அதுக்கு முன்னாடி நெகட்டிவா போயிட்டு இருந்தது. அந்த ரெண்டு வாரத்துல தான் நல்லா எனக்கு பாசிட்டிவா போயிட்டு இருந்துருக்கு. அந்த டைம்ல நான் வெளியே போயிருக்கேன்" என தனது எலிமினேஷன் சரியான ஒன்று தான் என்றும் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

Also Read | தலைவன் GP முத்துவுக்கே Counter கொடுத்த விக்ரமன்.. மனுஷன் ஃபுல் Fun மோடுல இருக்காப்ல!!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi about her elimination in bigg boss to myna nandhini

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmi, Dhanalakshmi about her elimination, Myna Nandhini, Vijay Television, Vijay tv will find this news story useful.