"அவரு கேம் ஆடுறது புடிக்காது, LETTER எழுதுன டாஸ்க்லயே அது தெரிஞ்சுருக்கும்". விக்ரமன் பற்றி தனா!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் திறனை நிரூபித்தும் வருகிறார்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், போட்டியாளராக இருந்த தனலட்சுமி முதல் முறையாக லைவில் தோன்றி உள்ளார். முன்னதாக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்று வரை முன்னேறுவர் என எதிர்பார்க்கப்பட்ட தனலட்சுமி, திடீரென வெளியேறி இருந்தது, பார்வையாளர்கள் பலரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

தொடர்ந்து, தன்னுடைய கேமை ஆடி கேள்விகளை எழுப்பியும் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டும் வந்த தனலட்சுமி, திடீரென வெளியேறி இருந்தது அந்த சமயத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி இருந்தது. அது மட்டுமில்லாமல், தொடர்ந்து எந்தவொரு வீடியோக்களோ, அல்லது நேரலையிலோ தனலட்சுமி இடம்பெற்றதாகவும் தெரியிவில்லை. இதனால், பிக் பாஸ் வீட்டில் சீக்ரெட் அறையில் தனலட்சுமி இருக்கிறார் என்றும் விரைவில் அவர் திரும்ப வருவார் என்றும் கூட சில கருத்துக்கள் பரவி இருந்தது.

அப்படி இருக்கும் நிலையில், தற்போது அந்த கருத்துக்கள் அனைத்தையும் உடைத்து விஜய் டிவியின் நேரலையில் தோன்றி உள்ளார் தனலட்சுமி. இதில், பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் தான் ஆடிய கேம் குறித்தும் மற்ற போட்டியாளர்கள் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்தும், ஃபேவரைட் போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட தனலட்சுமி, விக்ரமன் பற்றி கூறியுள்ள விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.

அப்போது வீட்டில் யாரை பிடிக்காது என்ற கேள்விக்கு பதில் அளித்த தனலட்சுமி "விக்ரமன்" என குறிப்பிட்டு, "வெளிய பர்சனலா எனக்கும் அவருக்கும் என்ன கனெக்ட் இருக்குங்குறது எனக்கு தெரியாது. பர்சனா எனக்கு அவரை புடிக்கும். ஆனா இந்த கேம்ல நான் அந்த வீட்ல இருந்த வரைக்கும், ADKவையும் விக்ரமனையும் எனக்கு பிடிக்காது.

இப்போ இந்த பன் சாப்பிடுற டாஸ்க்ல கூட இதைவிட ஈசியா இருந்திருக்கலாமே பிக் பாஸ்னு சொல்லி இருந்தாரு. அதை விட பயங்கரமான் டாஸ்க் எல்லாம் இருந்துச்சு. அந்த வார்த்தை சொல்லும்போதே தெரியும் கேம்ல அவருக்கு எவ்வளவு இது இருக்கு அப்படின்னு. அவர் கேம் மாதிரியே கொண்டு போகல. அந்த லெட்டர் எழுதுன டாஸ்க்ல எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும் அத கேமா அவரு கொண்டு போகல அப்படின்னு" என கூறி உள்ளார்.
 

 

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakashmi about vikraman and his game in bigg boss house

People looking for online information on Bigg boss 6 tamil, Dhanalakshmi, Vikraman will find this news story useful.