தேவயானி மற்றும் அபிஷேக் நடிப்பில் ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள்.

கோலங்கள் தொடரின் வெற்றிக்கு பின் அபிஷேக்கும் தேவயானியும் இணைந்து நடிக்கும் இந்த சீரியலுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. சென்னை நகரத்தில் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் கணவனை இழந்த தேவயானி மகனுக்கு மிகவும் செல்லம் கொடுத்து வளர்க்க, மகனுக்கு திருமணம் ஆகி வந்த மருமகள் மட்டுமே தேவயானியின் உண்மையான கஷ்டத்தையும், விருப்பங்களையும் அறிந்து தேவயானிக்கு சப்போர்ட்டிவாக இருக்கிறார்.
ஆனால் தேவயானியின் மகனை பொருத்தவரை அம்மாவின் விருப்பு வெறுப்புகள், சுயவாழ்க்கை உள்ளிட்டவை பற்றிய அக்கறை இல்லாமல் சுயநலமாக இருக்கிறார். இதனிடையே தேவயானியின் நண்பராக அறிமுகமாகும் பிரபல ஹோட்டல் அதிபர் மற்றும் செஃப் தான் ஹீரோ அபிஷேக்.
ஆனால் அபிஷேக்குடன் தன் அம்மா தேவயானி பேசுவதையோ பழகுவதையோ தேவயானியின் மகன் விரும்புவதில்லை. அதனால் தேவயானியும், தன் மகனின் விருப்பமே தன் விருப்பம். மகனுக்கு பிடிக்காதது தனக்கும் பிடிக்காது என, மகனுக்காக தன் விருப்பு வெறுப்புகளை கூட விட்டுக் கொடுத்து தியாகம் செய்கிறார்.
இந்த சீரியலில் தற்போது தேவயானியின் அதே அபார்ட்மெண்ட்டுக்கே அபிஷேக்கும் குடிவந்துவிட்டார். ஆனாலும் தேவயானி அவரிடம் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. இதனிடையே அபிஷேக்கிடம் குக்கிங் செய்வதற்கு ஆலோசனை கேட்டு நடிகை நமீதா இந்த அபார்ட்மெண்ட்டுக்கு அபிஷேக் இருக்கும் ஃபிளாட்டுக்கு நடிகையாகவே வருகை தந்தார். நமீதாவின் இந்த கெஸ்ட் ரோல் கடந்த வாரம் பிரபலமாக பேசப்பட்டது.
இந்நிலையில் தான் இந்த சீரியலில் தேவயானியின் மாமனாராக நடித்து வந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல்.ஐ.லியோனி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்த சீரியலில் நடிகர் ஜெயராஜ் நடிக்கிறார். கிடாயின் கருணை மனு உள்ளிட்ட படங்களில் நடித்த, பிரபல திரைப்பட மற்றும் சீரியல் நடிகரான இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.