90S Kidsகளுக்கு மறக்க முடியாத திரைப்படங்களுள் ஒன்று என்றால் அது ‘காதல் கோட்டை’ திரைப்படம்.

தல அஜித் நடித்த இந்த திரைப்படத்தில் அஜித்துடன் தேவயானி நடித்திருப்பார். கடைசிவரை கடிதங்கள் மூலம் காதல் செய்து கொள்ளும் அஜித் மற்றும் தேவயானி இருவரும் கிளைமாக்ஸ் காட்சியின் போது ஒரு ரயில் நிலையத்தின் சந்தித்துக்கொள்ளும்போது இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள்.
அந்த நேரத்தில் அஜித் போட்டிருந்த ஸ்வெட்டரை பார்த்துவிட்டு தேவயானி , “சூர்யா” என்று கத்துவார். ஏனென்றால் அது தேவயானி அஜித்துக்கு அனுப்பிய ஸ்வெட்டர். இதனை அடுத்து இருவரும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் ஒன்று சேர்வார்கள். இந்த காட்சியை தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தேவயானி தத்ரூபமாக மறுஉருவாக்கம் செய்து காட்டி அசத்தியிருக்கிறார்.
அந்த பட காட்சியில் வந்தது போலவே அழுது உருகி நடித்திருக்கிறார் தேவயானி. இந்த குறிப்பிட்ட காட்சிகள் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரோமியோ ஜூலியட் என்கிற நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தன.
நடிகை தேவயானி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடரின் நாயகனாக அபிஷேக் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் பல வருடங்களுக்கு முன்பாக சன் டி.வியில் ஒளிபரப்பாகி வந்த கோலங்கள் தொடரில் நடித்தவர்கள்.
இந்த நிலையில் தேவயானி மற்றும் அபிஷேக் இருவருக்கும் இந்த சீரியலில் திருமணமாக கூடிய காட்சிகள் விரைவில் வருவதாகவும், அதை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ’மெகா திருமண வைபவம்’ என்கிற பெயரில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பாகவிருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
முன்னதாக கணவரை இழந்த தேவயானி கேரக்டர், தன்னுடைய மகன், மருமகள் அனைவருடனும் வாழ்ந்து வர, அதே அபார்ட்மெண்ட்டில் அபிஷேக்கும் குடிவந்துவிட்டார்.
ஆனால் இறந்துபோன அபிஷேக்கின் அம்மா, அபிஷேக்கிற்கு பார்த்த வரன் தேவயானி தான் என்கிற உண்மையை அபிஷேக் யாரிடமும் சொல்லாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த ஜோடி எப்படி இணைய போகிறது என்பதை நோக்கி கதை விறுவிறுப்பாக சென்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.