சென்னை : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர்தான் தேவிஸ்ரீபிரசாத். இவர் தமிழில் சிங்கம், வீரம், வில்லு, மன்மதன் அம்பு போன்ற படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர்.
இவரது தற்போதைய படமான புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஐந்து மொழிகளில் பணியாற்றிய பயணம் குறித்து அவர் தனது அனுபவங்களை நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.
"ஓ சொல்றியா மாமா" பாடல் புது அனுபவம் குறித்தும், பாடகர்கள் கொடுத்த ஒத்துழைப்பையும் பகிர்ந்தார் தேவிஸ்ரீபிரசாத்.
ஓ சொல்றியா மாமா :
ஓ சொல்றியா மாமா பாட்டை வைரலாகி, இன்டர்நேஷனல் ஷாட்டில் அது தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எனக் கூறினார். நான்கு ஸ்வரங்களில் இசையமைத்த பாடல் தான் இது. அதுமட்டும் இல்லாமல், பல்லவி சரணத்தில் ஒரே டீயுனில் எடுக்கப்பட்ட பாடலாகும். மேலும் இந்தப் பாடலுக்கு இசையமைப்பதற்கு முன்பு, நான் இதன் டியூனை இயக்குனர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அனுப்பினேன். அவர்களிடமிருந்து கிடைத்த நல்ல வரவேற்பினால் அந்தப்பாடலுக்கு இசையமைத்து பின் ரிலீசானது. முதல் 20 நிமிடங்களுக்கு இது என்னடா ஐட்டம் சாங் என்று கமெண்ட்கள் வந்தன. அதன்பின் இது தாண்டா ஐட்டம் சாங் என்று கமெண்டுகள் வர தொடங்கின. மேலும் எப்போதுமே நாம் புது முயற்சிகளில் ஈடுபடும் போது அது வரவேற்புக் கிடைக்குமோ, இல்லையோ ஆனால் அது ஒரு மரியாதைக்குரிய விஷயமாகும் என கூறினார்.
சாமி சாமி பாடல்:
சாமி சாமி பாடலை இசையமைத்து தயாரிப்பாளருக்கு அனுப்பினேன்.அவர் அதைக் கேட்டு இதுவரை 100 கோடி படமாக இருந்தது. தற்போது இது 200 கோடி படமாகும் என கூறியிருந்தார். அல்லு அர்ஜுன் நன்றாக நடனம் ஆடுபவர். இந்தப்பாடல் அவருக்கும் ஏற்றார்போல் இருக்கவேண்டும் எனவும் அதற்காக மேலும் மெருகு செய்தேன். ஐந்து மொழிகளிலும் ஐந்து மொழிகளைச் சார்ந்த பாடகிகள் இந்த பாடலை பாடினார்கள். அதுதான் இந்தப் பாடல்கள் ஐந்து மொழிகளில் கொண்டாடகூடிய சிறந்த வெற்றியை தந்தது. இந்த படத்தில் மற்ற பாடல்களில் அதன் பாடல் வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கூறினார்.
ஸ்ரீவள்ளி பாடல்
"ஸ்ரீ வள்ளி" என்ற பாடலை நான்கு மொழிகளிலுமே சித் ஸ்ரீராம் தான் பாடியுள்ளார். அவர் எப்போதும் பாடல் வரிகளை பார்த்து உடனடியாக பாடி செல்வது வழக்கம். ஆனால், இந்த பாட்டுக்கு காலையிலிருந்து மாலை வரை பயிற்சி எடுத்து பாடிக் கொடுத்தார். நான் இன்று நிறைய கற்றுக் கொண்டேன் எனவும் கூறினார் . மேலும் அவர் "ஓ சொல்றியா மாமா" பாடலை அவர்கள் அவரது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது கேட்டுள்ளாராம், அந்த பாட்டு அவருக்கு மிகவும் பிடித்துபோக, எனக்கு கால் செய்து வெகுவாக பாராட்டினார்.
மேலும் படத்தின் பாடல்களுக்கு தமிழில் உள்ள நட்சத்திரங்கள் பாராட்டியது பெரிய மகிழ்ச்சியை தந்தது. தயாரிப்பாளர் தானு, நடிகர் பிரபுதேவா, சந்தானம் போன்ற பல தமிழ் திரையுலகினர் தொடர்புகொண்டு பாராட்டினர். இந்தப் படத்தின் பின்னணி இசைக்கு இவ்வளவு வரவேற்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. பாடல்களுக்கு ஏற்ற வரவேற்பு பின்னணி இசைக்கும் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது என சந்தோஷத்துடன் பகிர்ந்தார் தேவிஸ்ரீபிரசாத்.