விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இன்று ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
கோலிவுட்டின் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவரான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், அவர்களின் அன்பான ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே இறுதியாக இன்று திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன் பிரமிக்க வைக்கும் பளபளப்பான வெண்ணிற உடையையும், நயன்தாரா சிவப்பு நிற உடையையும் திருமணத்தில் அணிந்து கொண்டனர்.
இதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இவர்கள் அணிந்துள்ள ஆடைகள் குறித்து, இந்த ஆடைகளை உருவாக்கிய நிறுவனம் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. JADE Bride & Groom நிறுவனம் தான் இந்த உடைகளை வடிவமைத்துள்ளது.
JADE நிறுவனத்தின் வடிவமைப்பாளர்களான மோனிகா மற்றும் கரிஷ்மாவின் வடிவமைப்பில் இந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திருமண விழாவிற்கு, மணமகள் நயன்தாரா, மோனிகா ஷா வடிவமைத்த JADE நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற வெர்மில்லியன் சிவப்பு நிறத்திலான கைவினைப் புடவையை அணிந்துள்ளார். தொனி எம்பிராய்டரியில் உள்ள நுணுக்கமான தொனியானது, ஹொய்சாளர் கோவிலின் கட்டடங்களில் உள்ள சிறபங்களிலில் இருந்து ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியத்தின் மீதான நயன்தாராவின் அன்பிற்கு நன்றி செலுத்தும் வகையில், வடிவமைப்பாளர்கள் மோனிகா & கரிஷ்மா, லட்சுமி தேவியின் உருவங்களை ரவிக்கையின் கைகளில் பாஜுபந்தாக மறுவடிவமைத்துள்ளனர். கூடுதலாக, தம்பதியரின் பெயர்களும் உடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மணமகன் விக்னேஷ் சிவன், வேஷ்டி, குர்தா மற்றும் சால்வையை அணிந்திருந்தார். தர்மம், அர்த், காமம் மற்றும் மோட்சத்தை குறிக்கும் நான்கு கட்டளைகளை அவரது உடை எதிரொலிக்கிறது. இந்த உடைகள் JADE நிறுவனத்தின் தலைசிறந்த கைவினைஞர்களால் மிகவும் கடினமான கைவினைப்பொருளால் செய்யப்பட்டவை. சால்வையில் கைவினைப்பொருளான ஏக் தார் எம்பிராய்டரி உள்ளது.