எண்ணற்ற படங்கள், காமெடி ஷோக்கள் என்று அசத்த வருகிறது ஒரு புதிய தமிழ் ஓடிடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முன்பெல்லாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் எப்படி இருக்கீங்க என்று கேட்டுக் கொள்வோம். இப்போது யாரும் யாரையும் பார்ப்பதில்லை என்பதிருக்கட்டும். அப்படியே முகக் கவசத்துடன் பார்த்துக் கொண்டாலும், ஓரடி தள்ளி நின்று ‘உங்க ஏரியால கொரோனா எப்படி இருக்கு’ என்றுதான் முதலில் கேட்கிறோம். அந்தளவுக்கு கொரோனா என்ற சொல் ஒட்டுமொத்த மனித வாழ்க்கையில் அசைக்க முடியாத சக்தியாகிவிட்டது. எப்படியாவது இதற்கொரு தீர்வை கண்டறிய மருத்துவர்கள் போராடி வரும் நிலையில், இந்தியாவைப் பொருத்தவரையில் இதன் தீவிரம் சில ஊர்களில் மிக அதிகமாகவே உள்ளது.

லாக்டவுன் காலகட்டம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்க, பொதுமக்கள் பொழுதுபோக்கை இரண்டாம் பட்சமாக்கிவிட்டு, பிழைப்புக்கு என்ன செய்வதென்று பெருங்கவலையில் மூழ்கி உள்ளனர். வேலை வாய்ப்புக்கள் குறுகிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நித்ய கண்டம் பூர்ண ஆயுசு என்று நாட்கள் விரைந்தோடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் எல்லாவற்றையும் மீறி வாழ்தல் இனிது. இந்த வாழ்க்கை இறைவன் அளித்த கொடை, கொரோனா என்பது தற்காலிகமான ஒரு பிரச்சனை. எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்துவிட்ட மானுடன் இதையும் கடந்துவிடும் என்ற நம்பிக்கைதான் முக்கியம். மேலும் பாஸிட்டிவிட்டியை உறுதுணையாக்கினால் எந்த வைரஸும் நம்மை அண்டாது.

இந்த காலகட்டத்தின் துயரை மறக்கச் செய்யும் பொழுதுபோக்காக பலருக்கு இருப்பது over the top என்று சொல்லக் கூடிய OTT ப்ளாட்பார்ம்கள்தான். அமேஸான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் உள்ளிட்ட இணைய வழி பொழுதுபோக்கு அம்சங்கள்தான் பலரை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கிறது.

தங்களுக்குப் பிடித்த மொழியில், பிடித்த வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை மிகக் குறைந்த கட்டணத்தில் பார்க்க முடிவது உண்மையில் வரம்தான். இந்நிலையில் தமிழில் புதிதாக ஒரு ஓடிடி டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பெயர்தான் ஃப்ளிக்ஸ்டா'. அதென்ன ஃப்ளிக்ஸ்டா? 

தற்போது  ஃப்ளிக்ஸ்டா’ (Flixdaa) என்னும் புதிய ஓடிடி தளம் தமிழர்களுக்காக தமிழில் புதிதாக அறிமுகமாகியுள்ளது. இதில் வெப் சீரீஸ், படங்கள், ஷார்ட் ஃப்லிம்கள், இசை ஆல்பங்கள், சமையல் வீடியோக்கள், குழந்தைகளுக்கான கார்டூன் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள், ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகள், காமெடி ஷோக்கள், ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கள் உள்ளிட்ட பலவகையான நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கணக்கற்ற வீடியோக்களை அவர்கள் தளத்தில் அப்லோட் செய்ய, நேரம் காலம் மறந்து ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இந்தத் தளம் பார்வையாளர்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

Tags : Flixdaa, OTT, Amazon

Details about Flixdaa a new Tamil OTT Platform introduced now

People looking for online information on Amazon, Flixdaa, OTT will find this news story useful.