முத்தக்காட்சிகளால் பரபரப்பை கிளப்பிய தீபிகா படுகோனே! புதிய படத்தின் ரொமாண்டிக் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: தீபிகா படுகோன் நடித்த புதிய படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

கபூர் & சன்ஸ் படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் ஷகுன் பத்ரா தனது அடுத்த படம் பற்றி அறிவித்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பினார். குறிப்பாக தீபிகா படுகோன், அனன்யா பாண்டே மற்றும் சித்தாந்த் சதுர்வேதி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்க, கரண் ஜோஹரின் தயாரிப்பில் இந்த உருவாகும் என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு அது. இந்த படத்திற்கு கெஹ்ரையன் என பெயரிடப்பட்டது.

தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து ஷகுன் பத்ராவின் ஜௌஸ்கா ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரித்துள்ள இந்த கெஹ்ரையன் படம், சிக்கலான நவீன உறவுகளின் அடிப்படையில், வயது வந்தோருக்கான சினிமா என தர்மா புரொடக்‌ஷன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வமான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து விட்டு படத்தின் சில BTS புகைப்படங்களையும், இந்த திரைப்படத்திற்கான சிறிய டீசரை சில நாட்களுக்கு முன் பகிர்ந்தனர்.

சந்தானம் நடிக்கும் AGENT கண்ணாயிரம்! பெர்த்டே ட்ரீட்டாக வெளியான த்ரில்லான டீசர்!

 

சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தீபிகா படுகோன் இன்ஸ்டாகிராமில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சில காரணங்களால், இந்த படம் திரையரங்கு வெளியீட்டைத் தவிர்த்துவிட்டு OTT வழியைத் தேர்வுசெய்து, நேராக Amazon Prime -ல் ரிலீசாக உள்ளது.  இந்த படத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி, தைரியா கர்வா, நசீருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். டீசரில் தீபீகா படுகோன் 9 வருடங்களுகு பிறகு பிகினியில் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வெளியான டிரெய்லரில் பல முத்தக்காட்சிகளும், குளியலறை, படுக்கைகாட்சிகளும் இடம் பெற்றிருப்பது பரபரப்ப்பை கிளப்பியுள்ளது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆஸ்கார் விருது தகுதி பட்டியலில் ஜெய்பீம்.. 2 இந்திய படங்களில் ஒன்று.. ஜெயிச்சிடு மாறா!

 

நவீன உறவுச்சிக்கலை படம் பேச உள்ளதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என அவதானிக்கப்படுகிறது. டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர் இன்ஸ்டாகிராமில் லைவ்வாக பங்கு பெற்றனர்.

முன்பு கெஹ்ரையன், ஷகுன் பத்ரா இயக்கத்தில், கரண் ஜோஹரின் தயாரிப்பில், 25 ஜனவரி 2022 முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் படத்தின் ரிலீஸ் பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியாக பிப்ரவரி 11 ஆம் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Deepika Padukone starring new movie trailer released

People looking for online information on தீபிகா, தீபிகா படுகோனே, தீபிகா படுகோன், Deepika Padukone, Gehraiyaan, Karan Johar will find this news story useful.