தீபிகா படுகோனிடம் "I LOVE YOU" சொன்ன ரசிகர்.. அதுக்கு தீபிகா கொடுத்த 'நச்' பதில்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீபிகா படுகோனே ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய தீபிகா படுகோன், 2007 இல் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

Advertising
>
Advertising

Also Read | மிகப்பெரிய மாஸ் சாதனை படைத்த தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. பின்னணி தகவல்

பின்னர், சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் மறைந்த இர்ஃபான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் பிகு, ரன்பீர் கபூருடன் YJHD, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தி சினிமாவில் உச்ச நிலையை அடைந்தார். ஹாலிவுட் படமான XXX: Return of Xander Cage படத்திலும் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

தீபிகா படுகோன் கடைசியாக ஷகுன் பத்ராவின்  கெஹ்ரையானில் நடித்தார், அதற்கு முன், கபீர் கானின் 83, படத்தில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்தார். தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தையும், ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் பதான் படத்திலும் நடித்துள்ளார். பதான் படம் ஜனவரி 2023 இல் ரிலீசாக உள்ளது.

சமீபத்தில், ​​தீபிகா படுகோனே கார்டியர் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்து ரசிகர்களில் ஒருவர் 'ஐ லவ் யூ' என தீபிகா படுகோனை நோக்கி கத்தினார்.  அதற்கு தீபிகா படுகோனே, நான் திருமணமான பெண்" என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பலரால் பகிரப்பட்டு வருகிறது.

 

Also Read | பேரனுடன் அமெரிக்காவில் T. ராஜேந்தர்.. கூட யார் இருக்கானு பாருங்க.. இணையத்தை கலக்கும் LATEST போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Deepika Padukone savage Reply to a fan

People looking for online information on Deepika Padukone, Deepika Padukone reply to fan will find this news story useful.