அமெரிக்க காட்டுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மனைவி தீபிகா படுகோனே உடன் ரன்வீர் சிங் ADVENTURE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமெரிக்க காட்டுக்குள் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களை ரன்வீர் சிங் & தீபிகா படுகோனே தம்பதியர் வெளியிட்டுள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | ஜான்வி கபூர் நடிக்கும் கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்.. வெளியான டெரர்ரான போஸ்டர்!

தீபிகா படுகோனே ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய தீபிகா படுகோன், 2007 இல் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

பின்னர், சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் மறைந்த இர்ஃபான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் பிகு, ரன்பீர் கபூருடன் YJHD, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தி சினிமாவில் உச்ச நிலையை அடைந்தார். ஹாலிவுட் படமான XXX: Return of Xander Cage படத்திலும் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

தீபிகா படுகோன் கடைசியாக ஷகுன் பத்ராவின்  கெஹ்ரையானில் நடித்தார், அதற்கு முன், கபீர் கானின் 83, படத்தில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்தார். தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தையும், ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் பதான் படத்திலும் நடித்துள்ளார். பதான் படம் ஜனவரி 2023 இல் ரிலீசாக உள்ளது.

சமீபத்தில், ​​தீபிகா படுகோனே கார்டியர் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே குடும்பத்தினர் கலந்து கொண்டனர். கடந்த ஜூலை 6 ஆம் தேதி ரன்வீர் சிங் தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் தம்பதியர் கொங்கணி மொழி சார்ந்த பல நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். தீபிகா படுகோனே தாய்மொழி கொங்கணி ஆகும்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தில் எடுத்து கொண்ட சாகச வீடியோ & புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்பதியர் வெளியிட்டுள்ளனர். 

அருவியில் குதிப்பது, இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வது, கடற்கரையில் விளையாடுவது போன்ற போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

2018 ஆம் ஆண்டு தீபிகா படுகோனே & ரன்வீர் சிங் கொங்கணி & சீக்கிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 2012 ஆம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'விக்ரம்' படத்தை ஏன் தியேட்டர்ல போய் பாக்கல? அல்போன்ஸ் புத்திரன் சொன்ன காரணம்!

தொடர்புடைய இணைப்புகள்

Deepika Padukone Ranveer Singh USA Adventures Photos

People looking for online information on Deepika Padukone, Ranveer Singh, Ranveer Singh USA Adventures Photos, USA Adventures Photos will find this news story useful.