தீபிகா படுகோனே பிறந்தநாள்.. அசத்தலான போஸ்டரை வெளியிட்ட 'PROJECT K' படக்குழு .!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் 'Project K' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "துணிவு படத்தில் இதை எல்லாம் எதிர்பாருங்க".. நடிகை மஞ்சு வாரியர் EXCLUSIVE!

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு பரந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார். பாகுபலி படங்களுக்கு பின்னர் ஆக்சன் படமான 'சாஹோ' & கடந்த மார்ச் மாதம்  காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வெளிவந்த 'ராதே ஷியாம்' படத்தில்  நடித்திருந்தார். 

தற்போது பிரபாஸ் அடுத்து நான்கு பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இது பிரபாஸ் ரசிகர்களிடம்  பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள 'ப்ரோஜெக்ட் கே'  படம், 'ஆதி புருஷ்' மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் 'சலார்', சந்திப் ரெட்டி வாங்காவுடன் 'ஸ்பிரிட்'  படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.

தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தினை வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டனர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை திஷா பதானி கலந்து கொண்டார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 3 கட்டங்களாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. தீபிகா படுகோன், பிராபாஸ், அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.  இந்த ஆக்சன் காட்சிகளை  பிரபல சண்டை பயிற்சி இயக்குனர்கள் அனபறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான கே ஜி எப் படங்களில் சண்டை காட்சிகளை வடிவமைத்தது இவர்கள் தான். KGF முதல் பாகத்திற்காக அன்பறிவ் இரட்டையர்கள் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனேயின் 37-வது பிறந்தநாளை முன்னிட்டு 'ப்ராஜெக்ட் கே' படக்குழு பிரத்யேக போஸ்டரை வெளியிட்டுள்ளது. "இருளில் உள்ள நம்பிக்கை ஒளி" என்ற வாசகத்துடன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Also Read | நிக்கி கல்ராணி பிறந்தநாள் கொண்டாட்டம்.. குடும்பத்துடன் சேர்ந்து வெளியிட்ட சூப்பர் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Deepika Padukone Project K new Poster Released

People looking for online information on Deepika Padukone, Prabhas, Project K, Project K Movie Poster will find this news story useful.