தீபிகா படுகோன் போட்ருக்குற டிரெஸ் விலை இவ்வளவா? விலையுயர்ந்த MONOTONE உடையில் HOT போட்டோஷூட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை தீபிகா படுகோனின் LATEST போட்டோ ஷூட் புகைப்படங்களும், தீபிகாவின் உடைகளின் விலை விபரமும் வைரலாகி வருகின்றன.

deepika padukone monotone fashion photoshoot went viral
Advertising
>
Advertising

நடிகை தீபிகா படுகோனே தனது வரவிருக்கும் திரைப்படமான கெஹ்ராயானின் டிரெய்லரை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார், இது பலரையும் கவர்ந்துள்ளது. அப்போது டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வின் போது தீபிகாவின் தோற்றம், உடை பற்றி ரசிகர்கள் சமூக வலை தளங்களில் வர்ணித்து பேசி வந்தனர். இந்த டிரெய்லர் வெளியீட்டு நிகழ்விற்கு, தீபிகா ஒரு சிவப்பு ஹாட் லேடெக்ஸ் (ரப்பர்) ஆடையைத் அணிந்திருந்தார். 

deepika padukone monotone fashion photoshoot went viral

அதே போல் பட ப்ரோமோசனுக்கு இன்று (28.01.2022) கருப்பு நிற உடையில் மோனோ டோன் பேஷனில் கலந்து கொண்டுள்ளார். நிகழ்வுக்கு முன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தீபிகா படுகோன் அணிந்திருந்த Halpern Studio One Shoulder Cutout Ruched Faux Leather Mini Dress அமெரிக்க டாலர் மதிப்பில் $552 டாலராகும். தீபிகா படுகோன் அணிந்திருந்த காலனி Magda Butrym Pointed Toe Mule Wrap Pumps அமெரிக்க டாலர் மதிப்பில் $830 டாலராகும். 

தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து ஷகுன் பத்ராவின் ஜௌஸ்கா ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரித்துள்ள இந்த கெஹ்ரையன் படம், சிக்கலான நவீன உறவுகளின் அடிப்படையில், வயது வந்தோருக்கான சினிமா என தர்மா புரொடக்‌ஷன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வமான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து விட்டு படத்தின் சில BTS புகைப்படங்களையும், இந்த திரைப்படத்திற்கான சிறிய டீசரை சில நாட்களுக்கு முன் பகிர்ந்தனர்.

கெஹ்ரையன், ஷகுன் பத்ரா இயக்கத்தில், கரண் ஜோஹரின் தயாரிப்பில், 25 ஜனவரி 2022 முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் படத்தின் ரிலீஸ் பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியாக பிப்ரவரி 11 ஆம் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

Deepika padukone monotone fashion photoshoot went viral

People looking for online information on Amazon Prime, தீபிகா, தீபிகா படுகோனே, தீபிகா படுகோன், Deepika Padukone, Gehraiyaan, Halpern Studio One Shoulder Cutout Ruched Faux Leather Mini Dress, Karan Johar, Magda Butrym Pointed Toe Mule Wrap Pumps will find this news story useful.