ஹேப்பி பர்த் டே டூ தீபிகா படுகோன்.. இதுதான் ஒரிஜினல் ட்ரீட்.. உருகும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: தீபிகா படுகோனின் பிறந்தநாளான இன்று அவர் நடித்த புதிய படத்தின் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி உள்ளது.

Deepika Padukone gehraiyaan releasing on Feb 11 on Amazon prime
Advertising
>
Advertising

கபூர் & சன்ஸ் படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் ஷகுன் பத்ராவின் அடுத்த படம் பற்றி அறிவித்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பினார். குறிப்பாக தீபிகா படுகோன், அனன்யா பாண்டே மற்றும் சித்தாந்த் சதுர்வேதி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்க. கரண் ஜோஹரின் தயாரிப்பில் இந்த உருவாகும் என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு அது. இந்த படத்திற்கு கெஹ்ரையன் என பெயரிடப்பட்டுள்ளது.

Deepika Padukone gehraiyaan releasing on Feb 11 on Amazon prime

தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து ஷகுன் பத்ராவின் ஜௌஸ்கா ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரித்த கெஹ்ரையன், சிக்கலான நவீன உறவுகளின் அடிப்படையில், வயது வந்தோருக்கான சினிமா என தர்மா புரொடக்‌ஷன் மற்ரும் தீபிகா படுகோன் ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வமான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து விட்டு படத்தின் சில BTS புகைப்படங்களையும், திரைப்படத்திற்கான சிறிய டீசரை சில நாட்களுக்கு முன் பகிர்ந்தனர்.

புதிய படத்தில் பாலையாவுக்கு ஜோடியாகும் பிரபல தமிழ் நடிகை இவங்க தான்..!

 

 

டீசரில் தீபீகா படுகோன் 9 வருடங்களுகு பிறகு பிகினியில் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தீபிகா படுகோன் இன்ஸ்டாகிராமில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சில காரணங்களால், இந்த படம் திரையரங்கு வெளியீட்டைத் தவிர்த்துவிட்டு OTT வழியைத் தேர்வுசெய்து, நேராக Amazon Prime -ல் ரிலீசாக உள்ளது.  இந்த படத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி, தைரியா கர்வா, நசீருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தீபிகா படுகோன் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இந்த படத்தின் புதிய போஸ்டர்கள் ரிலீசாகி உள்ளன. இதில் படத்தின் ரிலீஸ் பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியாக பிப்ரவரி 11 ஆம் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. முன்பு கெஹ்ரையன், ஷகுன் பத்ரா இயக்கத்தில், கரண் ஜோஹரின் தயாரிப்பில், 25 ஜனவரி 2022 முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

பிரபல OTT-யில் வெளியாகப்போகும் BLOCKBUSTER புஷ்பா திரைப்படம்! எப்போ? எந்த OTT தெரியுமா?

 

 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Deepika Padukone gehraiyaan releasing on Feb 11 on Amazon prime

People looking for online information on Amazon Prime, அனன்யா பாண்டே, கபூர் சன்ஸ், தீபிகா, ஷகுன் பத்ரா, Deepika Padukone, Gehraiyaan will find this news story useful.